ஜாதி, மதம், மொழி, என்று எதனையும் பார்க்காமல் தேர்ந்தெடுத்த (MLA or MP) மக்களுக்கு தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
மக்கள் பிரதிநிதி திருமாவளவன் இதில் முற்றிலும் மாறுபட்டவராக உள்ளார் என்பதை சமீப காலமாக அவரின் எழுத்து, பேச்சின், மூலம் அறிந்துகொள்ள முடிவதாக மக்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
- கோவில்களில் ஆபாச சிலைகள் உள்ளது.
- ஹிந்துக்களை ஒன்று சேர விட கூடாது.
- கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
- ராமர் கோவில் கூடாது என்று கூறியது.
- இந்திய ராணுவத்தை பற்றி ஒரு போலி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டு. ராணுவ வீரர்களின் வீரத்தை இழிவுப்படுத்தியது.
அண்ணா சிலையின் மீது ஒரு குறிப்பிட்ட நிறத்தின் துணியை வீசி சென்றார் ஒருவர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்ட பொழுது. அவர் ஒரு மனநோயாளி என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் திருமாவளவனின் கண்டன அறிக்கையோ எவ்வாறு அமைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#பேரறிஞர்அண்ணா சிலை அவமதிப்பு: சனாதனிகளின் பழிதீர்க்கும் வெறி!
அண்ணாபெயரில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு வேடிக்கைப்பார்க்கப் போகிறதா? pic.twitter.com/ULhBwrwt6x— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 30, 2020