நேற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அகர்வால் வித்யாலயா பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. அதில் 21 மாநிலத்திலிருந்து 23 மொழி பேசும் நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் கலந்துகொண்டார். ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ரவிக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் பல மாணவ மாணவிகள் பங்கேற்று அனைவரையும் கவரும் வண்ணம் வட இந்திய பாரம்பரிய உடையில் நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சியை பாரத் பாரதி மற்றும் மாதவ சேவா சமிதி ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
தாயிடமிருந்து பெறுகிற முதல் விஷயம், அவள் கற்றுத் தரும் மொழி தான். அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான் என்று கூறுகிறார் ஞானசம்பந்தன் பேராசிரியர், மதுரை.