இரு திராவிட கட்சிகளின் கோர பிடியில் ஹிந்துக்கள் சிக்கி இன்று வரை கடும் வேதனையை அடைந்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. கோவில் விழா, பண்டிக்கை, வழிபாட்டு முறை, என அனைத்திலும் தமிழக அரசு கடுமையான முகத்தையே காட்டி வருகிறது.
மக்கள் தற்பொழுது கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கவும், மக்கள் மத்தியில் மீண்டும் மகிழ்ச்சி ஏற்படவும். விநாயக பெருமானை வழிபட அரசு அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக அரசு அனுமதி இல்லை என்று மறுத்து விட்டது.
சமூகத்தை சீரழிக்கும் மதுக்கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இதே அரசு. பனிமய மாதா திருவிழா தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேராயரை நேரில் சந்தித்து அனுமதி வழங்கியிருந்தனர்.
பக்ரீத் பண்டிக்கை விழாவிற்கு 20 கிலோ சந்தனக்கட்டையை வழங்கி இஸ்லாமியர்களிடம் தனது விசுவாசத்தை காட்டியது. ஹிந்து பண்டிக்கைக்கு அனுமதி இல்லை என்று கூறியிருப்பதன் மூலம். இரண்டாவது ஸ்டாலினாகவே எடப்பாடி மாறி விட்டார் என்று மக்கள் தங்களின் உணர்வுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.