சமீப காலமாக நடிகர் சூர்யாவின் போக்கு மக்களின் மத்தியில் கடும் சலசலப்பையும், அதிர்வலைகளையும், ஏற்படுத்தியுள்ளது. திரை அரங்கு உரிமையாளர் சங்கம் வேண்டுகோளை புறக்கணித்து ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இணைய வழி தளத்தில் வெளியிட்டது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, நீட் தேர்விற்கு எதிர்ப்பு, என்று தொடர்ந்து கருத்து வருகிறார்.. அரசு பள்ளி மாணவர்களின் திறமைக்கு முழுமையான மதிப்பளிக்காமல் நீட் தேர்விற்கு மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பதை அனைவரும் அறிந்ததே..
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு வையாபுரிதிடல் பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன் அவரின் இளையமகள் பிரியதர்ஷினி அப்பகுதி அரசு பள்ளியில் பயின்றவர்.. அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 128 மதிப்பெண்கள் பெற்று அரசுபள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியில் 494-வது இடத்தையும் பிடித்துள்ளார்..
பிரியதர்ஷினியிடம் செல்போன் இல்லை, பயிற்சி மையம் செல்லவுமில்லை, ஆனால் நீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக மாவணர்களின் திறமையை குறைவாக மதிப்பிட்ட திமுக, வி.சி.க, சில்லறை போராளிகள், நடிகர் சூர்யா போன்றவர்களின் முகத்தில் பிரியதர்ஷினி கரியை பூசியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..