Share it if you like it
- சற்றுமுன் பிரதமர் மோடி கொரோனா பற்றி நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளார். அதில் சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை உலக அளவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்து உள்ளது.
- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் ஆரம்பத்தில் சாதாரணமாக தான் இருப்பார் மற்றும் அவர்களுக்கு வைரஸ் இருந்தாலும் அதன் அறிகுறிகள் நமக்கு தெரியாது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வீட்டிலேயே இருங்கள்.
- கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவுகிறது.
- கொரோனா வைரஸின் அறிகுறிகளை அடையாளம் காண நேரம் எடுக்கும் என்றும், அதுவரை பலர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- 21 நாட்கள் தனிமை இல்லாவிட்டால் பல குடும்பங்கள் அழிந்துவிடும். ஏழைகளின் சிரமத்தை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் அனைவர்க்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- ஊரடுங்கு உத்தரவு இன்று இரவு 12 மணி முதல் 21 நாட்கள் வரை தொடரும்
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
- அடுத்த 21 நாட்களுக்கு நீங்கள் ஊரடங்கு உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுவோம்.
- நாம் இந்த கொரோனா விஷயத்தில் அலட்சியம் செய்தால் இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
- சமூக விலகல் பிரதமர் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.
- சீனா ,அமெரிக்கா, இத்தாலி,பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிலைமை கை மீறி சென்றுவிட்டது
- சமூக விலகல் மட்டுமே தற்போதைய தீர்வாகும்.வேறு தீர்வு இல்லை.
- இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Share it if you like it