நாட்டின் சட்டப்படி செயல்படுங்கள்- பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா!

நாட்டின் சட்டப்படி செயல்படுங்கள்- பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா!

Share it if you like it

பிரான்ஸ்  தங்கள் நாட்டில் செயல்படும்   “அரசியல் இஸ்லாம்” என்னும்  அமைப்பின் கீழ் செயல்படும் மசூதிகள், பள்ளிகள் மற்றும் அதனோடு தொடர்பில் உள்ள  ஸ்தாபனங்களை மூடத் தொடங்கியுள்ளது. மேலும் பதினைந்து மாவட்டங்களில் தீவிர இஸ்லாமிய அரசியல் சித்தாந்தத்தின் பெருக்கத்துடன் தொடர்புடைய 150 க்கும் மேற்பட்ட  சங்கங்களை  நிரந்தரமாக மூடியிருப்பது அந்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று  ஜரோப்பா நாடான ஆஸ்திரியாவில் “அரசியல் இஸ்லாம்” அந்நாட்டின் சட்டத்தை மீறியதால் ஏழு மசூதிகளை மூடவும், தீவிர பற்றுள்ள இமாம்களை நாடு கடத்தவும். ” அரசியல் மற்றும் பிளவுபடுத்தல் ஆகியவற்றை ஆஸ்திரியாவில் பிரசச்சாரம் செய்யக்கூடாது, இல்லையெனில் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார்கள் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம்கள் ஆஸ்திரியாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அவர்கள் சமூகத்தோடு  ஒன்றினணந்து வாழவும்  தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it