உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளத்தை, சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாற்றி தற்பொழுது தனது ஆதிக்கத்தை அங்கு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டிற்கே மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை சீனா அரசு இழைத்துள்ளது.
சமீபத்தில் நேபாள வானொலியில் அந்நாட்டிற்கு சொந்தமான ரூய் கிராமத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது எனவும். மேலும் அங்குள்ள தடையங்கள் எல்லாவற்றையும் முற்றிலும் அழித்தோடு மட்டுமில்லாமல் இது எங்கள் நிலம் என்று சீனா பகீரங்கமாகவே கூறிவிட்டது.
இச்செய்தி தற்பொழுது நேபாள மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சீனாவிடம் நேபாளம் இழந்த பகுதிகளை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
https://twitter.com/FrontalAssault1/status/1275753001563586560
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சீனாவை நம்பும் நேபாளத்திற்கு விரைவில் திபெத் கதியே ஏற்படும் என்று அந்நாட்டிற்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.