நாட்டு மாடு பராமரிப்பில் RSS யை பின்பற்றும் அரசு

நாட்டு மாடு பராமரிப்பில் RSS யை பின்பற்றும் அரசு

Share it if you like it

தமிழர்களின் உணவிலும் (பால்,தயிர்,மோர்,நெய்) உணர்விலும் மிக முக்கிய பங்காற்றும் நாட்டு இன மாடுகள் இன்று அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது. விவசாயிகளின் நண்பனாகவும், வீட்டில் செல்ல பிள்ளையாகவும் திகழ்ந்த நாட்டு இன மாடுகளை இன்று நாம் மறந்து விட்டு எதிர்கால நம் சந்ததியினருக்கு நம் பாரம்பரிய இனங்களை அடையாளம் காட்டாமல் செல்வது வருத்ததிற்குரிய நிகழ்வாகும்.

பல சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையை ஏற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக அரசு  சேலம் மாவட்டம், தலைவாசலில் கால்நடை அறிவியல் ஒருங்கினணந்த ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு இன மாடுகளை பராமரிப்பதற்கு தனி கவனம் செலுத்தப்படும். மேலும் அடிப்பட மாடுகளுக்கு முதலுதவி செய்ய அம்மா அவசர சிகிச்சை ஊர்திகள் ஏற்படுத்தப்படும் என்றும். மத்திய மாநில அரசுகளின் நிதி ஆதாரம் மற்றும் ‘நபார்டு’ வங்கி  அளிக்கும் 1,020 கோடி ரூபாய்  நிதி உதவியுடன் இது செயல்படுத்தப்படும் என்று  தமிழக பட்ஜெட்டில் அரசு தெரிவித்துள்ளது.

நாட்டு மாடு வளர்ப்பு, நோயுற்ற மாடுகளை பராமரித்தல், அடிப்பட மாடுகளுக்கு முதலுதவி செய்தல், முதுமையின்  காரணமாக இறந்த மாடுகளை  அடக்கம் செய்வது, இறைச்சிக்காக செல்லும் மாடுகளை வாங்கி  பராமரித்தல், அதனின் இனப்பெருக்கம் அதிகரிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் ”கோ சேவா” என்ற பெயரில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது .


Share it if you like it