நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஏர்டெல் வோடாபோன் தலைமை அதிகாரிகள் !

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஏர்டெல் வோடாபோன் தலைமை அதிகாரிகள் !

Share it if you like it

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிக கடன் தொகையால் தனது நிறுவனத்தையே இழுத்து மூடும் நிலைக்கு வந்தது AIRCEL நிறுவனம். அதே சூழ்நிலையை இன்று AIRTEL, VODAFONE நிறுவனமும் சந்தித்திருக்கிறது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையில் 2500 கோடி ரூபாயை வோடாபோன் நிறுவனம் செலுத்தியுள்ளது.இதேபோன்று 35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவை தொகையை வைத்திருக்கும் ஏர்டெல் நிறுவனமும் 10 ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியுள்ளது. இந்நிலையில் ஏர்டெல், வோடாபோன் தொலை தொடர்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it