நியூயார்க் – CAA க்கு ஆதரவாக திரண்ட இந்திய வம்சாவளியினர்!

நியூயார்க் – CAA க்கு ஆதரவாக திரண்ட இந்திய வம்சாவளியினர்!

Share it if you like it

நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளிலும் இந்த சட்டம் பற்றி பரவலாக பேசப்பட்டு உள்ளது. இதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் பேரணியாக திரண்டனர்.குடியுரிமை திருத்த சட்டம் மனித உரிமைகள் பற்றியது. சிறுபான்மையினரை படுகொலை செய்ய தெய்வ நிந்தனை சட்டத்தினை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது, கடந்த 1947ம் ஆண்டில் 23 சதவீதம் என்ற அளவில் இருந்த சிறுபான்மையினர் இப்பொழுது 1 சதவீதம் அளவிலேயே உள்ளனர் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி அவர்கள் திரண்டு இருந்தனர்.


Share it if you like it