மக்களிடையே குழப்பம் தரும் வகையில் யார் பேசியிருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று முரளிதர், தல்வந்த் சிங் ஆகிய டெல்லி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி முரளிதர் வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து. வழக்கம் போல் அனைத்து எதிர்க்கட்சிகளும் பி.ஜே.பி அரசு நீதிபதியை மாற்றிவிட்டது என பிரயங்காந்தி, ராகுல் காந்தி, முதல் பல தலைவர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்தினை பதிவிட்டுள்ளனர்.
Remembering the brave Judge Loya, who wasn’t transferred.
— Rahul Gandhi (@RahulGandhi) February 27, 2020
உண்மை என்னவென்றால் பிப்ரவரி 17ம் தேதியே கொலீஜியத்தால் முரளிதர் இடம் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சட்ட அமைச்சகம் கொலீஜியத்தின் ஆலோசனை படியே அறிவிப்பை வெளியிட்டது.
The midnight transfer of Justice Muralidhar isn’t shocking given the current dispensation, but it is certianly sad & shameful.
Millions of Indians have faith in a resilient & upright judiciary, the government’s attempts to muzzle justice & break their faith are deplorable. pic.twitter.com/KKt4IeAMyv
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 27, 2020
நீதித்துறையில் இடமாற்றங்கள் மற்றும் நியமனம் ஆகியவை கொலீஜியத்தின் முடிவே இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலி செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், தலைவர்கள் அமைதியாக இருந்தாலே மேலும் கலவரம் தொடராது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.