சீனா பரப்பிய கொரோனா தொற்றால் உலகமே இன்று ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா தனது கோர முகத்தை இங்கு காட்ட முடியவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் இரவு, பகலாக, அரும்பாடுபட்டதே இதற்கு காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ஆதிர் சவுத்ரி அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வளர்ந்து வருகிறது, சீனாவின் நம்பகத்தன்மையை உலக நாடுகள் மத்தியில் கேள்விகுறியாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவை ஒரு முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான நேரம் கனிந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள், மற்றும் மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக சிறப்பான முறையில் போராடுகின்றனர். இப்போது அமெரிக்காவையும், ஐரோப்பாவையும், பார்க்கும்போது இந்தியா முன்னேறி கொண்டு வருவது தெரிகிறது. இதுப்போன்று உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் நாட்களில் இந்தியா ஒரு முன்மாதிரி நாடாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. என்று மற்றொரு டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Covid19, a golden opportunity for India is looming large, given China's fast losing credibility in the world , time is ripe to turn India into a potential investment destination, 'Charaiveti', 'Charaiveti' go ahead,
— Adhir Chowdhury (@adhirrcinc) April 22, 2020