500 ஆண்டு கால ஹிந்துக்களின் கனவினை, பாரதப் பிரதமர் மோடி. அனைத்து தரப்பு மக்களின் ஆசீர்வாதத்துடன், நேற்று ராமர் ஆலயத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே..
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
கங்கா-ஜமுனா கலாச்சாரம் கொண்ட நகரமான அலகாபாத்தில் வளர்ந்தவன் நான். ராம்லீலாவைப் பார்ப்பதை மிகவும் விரும்புபவன். இரக்கம், சகவாழ்வு, மரியாதை, மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் கதை. இறைவன் ராமர் எல்லோரிடமும் நன்மையையே கண்டார். நாம் வாழும் முறை அவரது சகாப்தத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அன்பு, மற்றும் ஒற்றுமையின் வழியில் வர மறுக்கும் எதிர்ப்பாளர்களை நாம் கண்டு கொள்ள தேவையில்லை என்று முகமது கைஃப் தெரிவித்து உள்ளார்.
Growing up in Allahabad,a city with Ganga-Jamuna culture,I loved watching Ramlila-a tale of compassion,co-exsistence,honour and dignity.Lord Ram saw goodness in everyone and our conduct should reflect his legacy.Don’t allow the agents of hate to come in the way of love and unity.
— Mohammad Kaif (@MohammadKaif) August 5, 2020