மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து வந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பா.ஜ.க அதிரடியாக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாளை மாலை 5 மணிக்குள் பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது,
இன்நிலையில் மராட்டிய துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இன்று மாலை 3:35 மணியளவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித் பவார் தானாக முன்வந்து தங்களிடம் பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி ஆதரவு கடிதம் கொடுத்ததை நம்பியே ஆட்சி அமைத்தோம் என்றும் இப்பொழுது அவர் பின்வாங்கியதால் தங்களிடம் போதிய பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
பட்னாவிஸ் ராஜினாமா..!
Share it if you like it
Share it if you like it