அரசு மட்டுமே மக்களின், தேவைகளை முழுமையாக, பூர்த்தி செய்ய முடியாது. என்பதை கருத்தில் கொண்டு, பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், கிருமி நாசினி, உணவுகள், முக கவசம், ஏழைகள் இருக்கும் பகுதிகளுக்கு, சென்று சேவை செய்து வருகின்றனர்.
இதுவரை நாடு முழுவதும், 26 ஆயிரம் இடங்களில், 2 லட்சம் ஸ்வயம் சேவகர்கள் இரவு, பகல், பாராமால் பாரத குழந்தைகளுக்கு, புனித சேவை செய்து வருகின்றனர். இதன் மூலம் 25.5 லட்சம், குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்று – டாக்டர் மன்மோஹன் வைத்யா கூறியிருந்தார்.
கொரோனா தொற்று, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், தெலுங்கானாவும் ஒன்று. அம்மாநில காவல்துறை தங்களின் பணிச்சுமையை, குறைக்க ஆர்.எஸ்.எஸ்ஸிடம் உதவி கேட்டது.
இதனை அடுத்து களத்தில், இறங்கிய ஆர்.எஸ்.எஸ் சேவர்கள், யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச், சாவடியில் தினமும் 12 மணி நேரம், காவல்துறைக்கு உதவி புரிந்து வருவது பலரின், கவனத்தையும் ஈர்த்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.