நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 23 வயது தீவிரவாதி சிஆர்பிஎப் வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இறந்த பயங்கரவாதி சஜாத் நவாப் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையில், அந்த பயங்கரவாதி சம்பவ இடத்திலிருந்து இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்தவர் என்பது தெரியவந்தது.
காவல்துறையினர் பயங்கரவாதியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து, கோவிட் -19 ஊரடங்கு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தினர்.
இருப்பினும், உத்தரவுகளை முற்றிலுமாக மீறி சோபோரின் ஜைங்கீர் கிராமத்தில் சுமார் நானூறு குடியிருப்பாளர்கள் அவரது இறுதி சடங்கில் கூடினர். பின்னர் அவர்கள் போலீசாரால் கலைக்கப்பட்டனர்.
ஒரு நாட்டின் ராணுவ வீரர் இறந்தது போல் பயங்கரவாதியின் இறுதி சடங்கில் விதிகளை மீறி கலந்துகொண்டவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் பைத்தியங்களே செத்தவன் என்ன தியாகியா உலகையே அச்சுறுத்திய பயங்கரவாதி என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.