கொரோனா பரவ சீனா தான் காரணம் என ஜப்பான், அமெரிக்கா, இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அந்நாட்டை குற்றம் சாட்டி வருகிறது. சீனா ஏற்றுமதி செய்த மருத்து உபகரணங்கள் தரமற்றவை என கனடா, இந்தியா, தான்சானியா, மற்றும் ஜரோப்ப நாடுகள் பகீர் குற்றச்சாட்டை உலக நாடுகள் மத்தியில் முன் வைத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அதிபரின் உதவியாளராக பணியாற்றி வரும் ராபர்ட் சி. ஓ பிரையன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவில் கொனோரா தொற்று அதிகம் இருந்த பொழுது அந்நாட்டிற்கு மருத்துவ குழுவை அனுப்ப அமெரிக்கா முன்வந்தது. அதனை ஏற்க சீனா மறுத்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், தற்பொழுது கொரோனா என பல கொடிய நோய் தொற்று கிருமிகள் அந்நாட்டில் இருந்து தான் பரவியுள்ளது. சீனாவில் இருந்து தான் கொரோனா பரவியதற்கான ஆதாரங்களை தற்பொழுது அமெரிக்கா திரட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.