பாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கட்சியா காங்கிரஸ்?-நெட்டிசன்கள் கலாய்!

பாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கட்சியா காங்கிரஸ்?-நெட்டிசன்கள் கலாய்!

Share it if you like it

தேச நலன் விரும்பும் கட்சி என்று தங்களை பிரகடனப் படுத்திக்கொள்ளும் காங்கிரஸ். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், செயல்பட்டு கொண்டும் வருகிறது என்று மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக, முடிந்து போன காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத அரசு மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது. பத்தாம் வகுப்பு கேள்வித்தாளில் ’சுதந்திர காஷ்மீர்’ என்று அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கி இருப்பது, இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது அடுத்த தலைமுறைக்கு, ’காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு அங்கம் அல்ல’ என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதில் பதிய வைக்கும் என்றும், தொடர்ந்து பாகிஸ்தானின் கருத்தை, எண்ணத்தை, வெளிப்படுத்தும் ஊது குழலாக காங்கிரஸ்?  என்று நெட்டிசன்கள் தங்கள் கடும் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it