சீனாவின் தூண்டுதல் பெயரில் காஷ்மீர் விவகாரத்தை ஜ.நா பாதுகாப்பு குழுவிற்கு அண்மையில் பாகிஸ்தான் கொண்டு சென்றது. வல்லரசு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே பாகிஸ்தான் மூக்குடைந்து திரும்பியது.
பாகிஸ்தானிற்கு oil வழங்குவதை சவுதி அரேபியா தற்பொழுது நிறுத்தியுள்ளது. நிலுவையில் உள்ள கடன்களை உடனே திருப்பிச் செலுத்துமாறு சவுதி அரேபியா பாகிஸ்தானிற்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளது.
அதனை சமாளிக்கும் விதமாக பாகிஸ்தான். 2 பில்லியன் டாலர் அளவிற்கு சீனாவிடம் மீண்டும் கடன் வாங்கியுள்ளது. அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி காஷ்மீர் விவகாரத்தில், சவுதி அரேபியாவின் நிலைபாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். பாக்., அமைச்சரின் கருத்து சவுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1291990382478270465