Share it if you like it
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளி கே.எல்.இ., கல்லூரியில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியானை சேர்ந்த மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற புல்வாமா தாக்குலுக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து அக்கல்லூரியின் முதல்வர் மூவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார். அதற்குள் மாநிலம் முழுவதும் இச்செய்தி பரவியதை அடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்., என்று புகார்கள் குவிந்தது இதனை அடுத்து அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது, மட்டுமில்லாமல் அவர்கள் மூவரும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it