பாகிஸ்தானில் கிருஷ்ணர் ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் தீர்மானித்தனர். இதற்கு பாகிஸ்தான் முன்னால் பிரதமர் முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வரை தங்களின் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். கோவில் எழுப்பினால் பாகிஸ்தானில் உள்ள ஒட்டு மொத்த ஹிந்துக்களையும் கொல்வோம் என்று சிலர் எச்சரித்தனர்.
பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா இந்தியாவின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும், கொண்டவர். இந்தியாவிற்கு எதிராக யார் எழுதினாலும், விமர்சனம் செய்தாலும் கடும் கண்டனம் தெரிவிக்க கூடியவர். இந்நிலையில் பின்வருமாறு ஆரிஃப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு மசூதி, ஆனால் அவர்கள் ஒரு சிறிய கோயிலுக்கு பயப்படுகிறார்கள். எதிர்ப்பவர்களுக்கு ஒரு மனநல மருத்துவர் தேவை … அவர்கள் சொந்த நம்பிக்கைகளைப் பற்றி உறுதியாக தெரியாவிட்டால், தங்கள் இமானை (நம்பிக்கையை) மறுபரிசீலனை செய்ய வேண்டும். போலித்தனம் பாகிஸ்தானியர்களை எங்கும் அழைத்துச் செல்லவில்லை ஆனால் இது மேலும் அழிவை தரும் என்று கூறியுள்ளார்.
A mosque in every street of Pakistan, yet they are affraid of a small temple (Mandir).
They need a psychiatric.. If they are not sure about their own beliefs, they should revisit their imaan (belief). Hypocricy is taking Pakistanis to nowhere, but further destruction. pic.twitter.com/rDR44mvbeM— Arif Aajakia (@arifaajakia) July 10, 2020