அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி பாரதப் பிரதமர் மோடி, ஜம்மூ-காஷ்மீர் மற்றும் இந்திய ராணுவத்தை பற்றி மிகவும் இழிவாக பேசிய காணொலி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் பிரதமர் கூட கொரோனா வைரஸ் என்பது எல்லைகள், மதங்கள், மற்றும் ஜாதிக்கு, அப்பாற்பட்ட ஒரு போர் என்று தான் கூறியுள்ளார். எனவே தான் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அப்ரிடி அறக்கட்டளைக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு மக்களிடம் நான் மற்றும் யுவராஜ் சிங் கூறினோம்.
பாரதப் பிரதமர் மோடி மற்றும் இந்திய இராணுவத்தை பற்றி கருத்து கூறியதற்கு பிறகு ஷாஹித் அப்ரிடிக்கும் எனக்கும் இனிமேல் எந்த உறவும் இல்லை‘ என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்
நான் இந்த நாட்டில் பிறந்தேன், இந்த நாட்டில் தான் இறப்பேன். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனது நாட்டிற்காக விளையாடியுள்ளேன், இந்தியாவுக்காக பல ஆட்டங்களில் வென்றுள்ளேன்..
” இன்று அல்லது நாளை எந்த இடமானாலும் சரி அது எல்லையாக இருந்தாலும் சரி எனது நாட்டிற்காக நான் தேவைப்பட்டால் முதல் மனிதனாக ஆயுதம் ஏந்தி சென்று களத்தில் நிற்பேன் என்று நேற்று தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்பஜன் சிங் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.