பாரதமாதா சிலை அகற்றம்…! துரோகிகள் வெட்கமின்றி தேசிய சின்னங்களை அவமதிப்பதா?  கிறிஸ்துவ மிஷநரிகள் மீது பாய்ந்த – தருண் விஜய்!

பாரதமாதா சிலை அகற்றம்…! துரோகிகள் வெட்கமின்றி தேசிய சின்னங்களை அவமதிப்பதா? கிறிஸ்துவ மிஷநரிகள் மீது பாய்ந்த – தருண் விஜய்!

Share it if you like it

இந்தியாவில் கேரளாவை அடுத்து தமிழகத்தில் தான் கிறிஸ்துவ மிஷநரிகளின் ஆட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஹிந்துக்கள் எங்கு சிறுபான்மை ஆகின்றனரோ அங்கெல்லாம் அவர்களின் வழிபாட்டு முறைகள், விழாக்கள், சடங்குகள், மீது கிறிஸ்துவ மிஷநரிகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என ஹிந்து அமைப்புகள் இன்று வரை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

Image
மிஷனநரிகளின் தூண்டுதலின் பெயரில் காவல்துறை நடவடிக்கை

முத்து குமார் என்னும் ஒரு தினக்கூலி தொழிலாளி ஒருவர் தனது சொந்த நிலத்தில் ஒரு கோவில் ஒன்றை உருவாக்கி. தனது சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு பாரத மாதா சிலை ஒன்றை அக்கோவிலில் நிறுவியுள்ளார்.

கிறிஸ்துவ மிஷநரிகளின் தூண்டுதலின் பெயரில் கன்னியாகுமாரி மாவட்ட காவல் துறையினர் பாரதமாதா சிலையை அக்கோவிலில் இருந்து அகற்றுமாறு முத்து குமாரை கடுமையாக எச்சரித்துள்ளது அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழ் மொழி மீது பற்று கொண்டவருமான தரூண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்த நிலத்தில் பாரதமாத சிலையை நிறுவியவரை தமிழ் நாடு அரசு தடை செய்கிறது. சுப்பிரமணி பாரதி மற்றும் திருவள்ளூவரின் நிலம் அது. துரோகிகள் வெட்கமின்றி தேசிய சின்னங்களை அவமதிக்கிறார்கள். நாங்கள் சவுதி அல்லது வாடிகன் நகரில் வசிக்கிறோமா என்று அவர் கேள்வி? எழுப்பியுள்ளார். கன்னியாகுமரியில் வசிக்கும் பாரதமதாவின் குழந்தைகள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்று தனது கவலையை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it