அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் பகுதியில் முத்து குமார் என்னும் கூலி தொழிலாளி தனது சொந்த நிலத்தில் கோவில் ஒன்றை உருவாக்கி அக்கோவிலில் பாரத மாதா சிலை ஒன்றையும் நிறுவியிருந்தார். கிறிஸ்துவ மிஷனரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள் காவல்துறை உதவியுடன் பாரத மாதா சிலையை அகற்றினர். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் பாரத மாதா சிலை பொதுமக்கள் முன்னிலையில் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத கிறிஸ்துவ மிஷநரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பாரதமாத சிலையை அக்கோவிலில் இருந்து உடனே அப்புறப்படுத்த
வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருப்பது. மீண்டும் அப்பகுதில் கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்து குமாருக்கு
மீண்டும் மீண்டும் கடுமையான மன உளைச்சலை கிறிஸ்துவ மிஷநரிகள் ஏற்படுத்தி வருவதற்கு நெட்டிசன்கள் தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.