சர்ச் அல்லது மசூதி சொத்துக்களை விற்க ஜெகன் மோகன் முன் வருவாரா? ஹச்.ராஜா காட்டம்!

சர்ச் அல்லது மசூதி சொத்துக்களை விற்க ஜெகன் மோகன் முன் வருவாரா? ஹச்.ராஜா காட்டம்!

Share it if you like it

விழுப்புரம், குடியாத்தம், திருவள்ளூர், மற்றும் தமிழகத்தில் மொத்தம் 23 இடங்களில் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கிய நிலங்கள் உள்ளது. இச்சொத்துக்களை ஜெகன் மோகன் ரெட்டி அரசு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது. இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் குழு ஒன்றினை அமைத்து இச்சொத்துக்களை விற்க முயல்வதாக ஜனசேனா கட்சி அண்மையில் குற்றம் சாட்டி இருந்தது.

blank
ஜனசேனா கட்சி அண்மையில் ஜெகன் மோகன் ரெட்டியின் செயலை கண்டித்த பொழுது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருமலா திருப்தி தேவஸ்தானம் திருப்தி கோவில் சொத்துக்களை விற்க நினைப்பது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது. ஒரு சர்ச் அல்லது மசூதி சொத்துக்களை விற்க ஜெகன் மோகன் முயற்சிப்பாரா? ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே இது.


Share it if you like it