பாதிரியார் பிராங்கோ முலாக்கல் கேரளாவையே அலற விட்ட அவரை அவ்வளவு எளிதில் அம்மாநில மக்கள் யாரும் மறந்து இருக்க முடியாது. இவரின் காம சுனாமியில் சிக்கி பல கன்னியாஸ்திரிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருந்தனர்.
இவரின் உண்மை முகத்தை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்று சில கன்னியாஸ்திரிகள் துணிச்சலாக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வழக்கம் போல் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாதிரியாருக்கு சிறப்பாக முட்டு கொடுத்து அடை காத்தது.
நாடு முழுவதும் நிலைமை தீவிரம் அடையவே பாதிரியாரை கேரள அரசு கைது செய்தது. ஆனால் அவரோ தன் செல்வாக்கை பயன்படுத்தி ஜாமினில் வெளிவந்து கட்டவிழ்த்த காளை போல் திரிந்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபையின் கன்னியாஸ்திரிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும், உடனே பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என்று சக கன்னியாஸ்திரி லூசி கலப்புரா அப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
இதனை அடுத்து லூசி சர்ச் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு அவப்பெயரை ஏற்படுத்தினார் என்று பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை அவரை வெளியேற்ற முடிவு செய்திருந்தது.
இதனை எதிர்த்து வாடிகனில் அவர் முறையிட்டார் அவரின் மனுவை தள்ளுபடி செய்து வாடிகன் உத்தரவிட்டு இருந்தது. இது ஒருதலைப்பட்சமான முடிவு எனவும் தன்னை சபையில் இருந்து நீக்க கூடாது என்று இரண்டாவது முறையாக அவர் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் அவரின் கோரிக்கைக்கு அர்த்தமற்ற பதிலை கூறி மீண்டும் நிராகரிக்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் உள்ள கன்னியாஸ்திரிகளின் மத்தியிலும் இப்படி பகலிலே பாவம் செய்கிற பாதிரியார்களை பாதுகாப்பது தான் வாடிகன் வேலையா என்று கிறிஸ்வர்கள் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.