Share it if you like it
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 செப்டம்பர் 23-ம் தேதி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் தற்போது 1 கோடி பேர் பயனடைந்ததாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாய் வரையில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை இந்திய அரசே ஏற்கும். இந்தத் திட்டத்துக்கான செலவில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும். இதுவே இந்த திட்டத்தின் முக்கிய சாரம்சமாகும்.
- இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இது இரண்டு ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது. இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். மேலும் ஒரு கோடி எண்ணிக்கையை அடைந்த நபராக பயன் பெற்ற பெண்ணுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசி அந்த பெண்மணிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். பிரதமரின் இந்த பதிவை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் ரீட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்தார்.
Share it if you like it