Share it if you like it
- சமீபத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு முதல்வரும், தங்களுடைய மாநில பிரச்னைகளை மோடியிடம் எடுத்துக் கூறினர்.
- ஆனால் மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி பேசும் போது, “கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது. என் மாநிலத்தில், மத்திய அதிகாரிகள் குழுவை அனுப்பி, பிரச்னையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” ?’ என, ஒரு பிரதமரிடம் பேசுகிறோம் என்கிற மரியாதை இல்லாமல் மம்தா பானர்ஜியின் கட்சியினரிடம் பேசுவதுபோல் கண்ணியமில்லாமல் மிக கோபமாகவும், தரக்குறைவாகவும் சத்தம் போட்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி கோபத்துடன் சத்தமிட்டு பேசியது வீடியோ கான்பரன்ஸில் இணைந்திருந்த மற்ற மாநில முதல்வர்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியது. அவை நாகரிகம் கூட மம்தா பானர்ஜிக்கு தெரியாதா என சிலர் ஆதங்கப்பட்டனர்.
- ஆனால், பிரதமரோ, மம்தாவின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். உடனே பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ‘ஒவ்வொரு முதல்வரும் நீண்ட நேரம் பேசினால், இந்த கூட்டம் முடிய, இரவு, 11:00 மணி ஆகிவிடும்; எனவே, யாரும் ஆறு நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது’ என, சொன்னாராம். மோடியும், ‘இது சரியான யோசனை’ என்றாராம். இதற்குப் பின்தான் பேச்சை முடித்திருக்கிறார், மம்தா.
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடம், ‘எதுக்கு அந்த அம்மா இப்படி கத்தறாங்க?’ என கேட்டாராம். அந்த கூட்டத்தில், ஹிந்தி தெரிந்த சில அதிகாரிகள், மொழி பெயர்த்து, முதல்வருக்கு விளக்கியதாக கூறப்படுகிறது.
Share it if you like it