பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்ற போலி செய்தியை சமூக வலைத்தளங்களில் மர்ம நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. பிரதமர் மோடி அவ்வாறு பதிவிட்டவருக்கு கண்டனம் தெரிவிக்காமல் மிக சாதுர்யமாக பதிலடி தரும் விதமாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில், என்மேல் உள்ள அன்பினாலும்.மரியாதையினாலும் வெளிக்காட்டும் நல்லெண்ணத்துடன் அவர் இவ்வாறு பதிவிட்டிருக்கலாம். உண்மையில் என்மேல் அன்பின் காரணமாக அவர் இவ்வாறு பதிவிட்டிருந்தால், இதை செய்வதற்கு பதிலாக கொரோனா நோயால் வெளியில் வராமல் உணவுக்கு தவிப்பவர்களான ஒரு ஏழை குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள், அதுதான் எனக்கு பெரும் கவுரவம் என பதிவிட்டுள்ளார். இந்த டுவீட்டை பலரும் தற்போது ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.
हो सकता है कि यह किसी की सदिच्छा हो, तो भी मेरा आग्रह है कि यदि सचमुच में आपके मन में इतना प्यार है और मोदी को सम्मानित ही करना है तो एक गरीब परिवार की जिम्मेदारी कम से कम तब तक उठाइए, जब तक कोरोना वायरस का संकट है। मेरे लिए इससे बड़ा सम्मान कोई हो ही नहीं सकता।
— Narendra Modi (@narendramodi) April 8, 2020