நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றியும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் பற்றியும் உரையாற்றினார். அவர் கூறிய கருத்துக்களை முன்னரே நமது மீடியான் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என கூறியுள்ளார். இதனை பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சங்கர் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதை பாலிவுட் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அதில்,
அஜய் தேவ்கன் கூறுகையில்,
பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 22ம் தேதி அனைவரையும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். இதை அனைவரும் உறுதியோடும், கட்டுப்பாடோடும் செய்ய வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஷில்பா ஷெட்டி கூறுகையில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ஏற்று நாம் அனைவரும் சுய கட்டுப்பாட்டை ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும். ஜெய்ஹிந்த் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரித்தேஷ் தேஷ்முக் டுவிட்டரில், மார்ச் 22ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7மணி வரை மக்களே சுய ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். 60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலேயே இருக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராட நாட்டுக்காக இதை அனைவரும் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
ஹேமமாலினி டுவிட்டரில், பிரதமர் மோடியின் உரை நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தது. நாட்டின் மீதான அவரின் தன்னலமற்ற பக்தி மற்றும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அவர் மேற்கொள்ளும் திட்டங்களை பார்த்து வணங்குகிறேன். நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றுபட்டு இந்த கொடிய நோயின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவோம் ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.
வருண் தவான் டுவிட்டரில், மார்ச் 22ம் தேதி, சுய ஊரடங்கிலும், அன்று மாலை 5மணிக்கு நாட்டுக்காக சேவை செய்யும் ஹீரோக்களை கைதட்டி வரவேற்கும் விஷயத்திலும் நான் பங்கேற்பேன். சமூகத்தில் இருந்து விலகி இருப்போம். பிரதமர் மோடியின் அறிவுரைகளை பின் பற்றுவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
அக்ஷய் குமார் டுவிட்டரில், பிரதமர் மோடியின் சிறந்த முயற்சி. மார்ச் 22ம் தேதி நாம் அனைவரும் சுய ஊரடங்கு செய்து, இந்த உலகத்துக்கு நாம் அனைவரும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என எடுத்துரைப்போம் என கூறியுள்ளார்.
ஷபானா ஆஷ்மி டுவிட்டரில், கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சு அருமையாக இருந்தது. மார்ச் 22 அன்று காலை 9 மணி முதல் இரவு 7மணி வரை சுய ஊரடங்கு செய்து கொள்வோம் என பிரதமர் கூறியிருப்பதை நாம் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதேப்போன்று இந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு சேவை செய்யும் நபர்களை கவுரவிக்கும் விதமாக கைதட்ட கேட்டு கொண்டதையும் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.