பீகாரில் தற்பொழுது பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளதை அனைவரும் அறிந்ததே… பீகார், மத்திய பிரதேசம், குஜராத், மணிப்பூர், தெலுங்கானா, கர்நாடகா, உ.பி. போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது.. இந்நிலையில் பாஜக உறுப்பினர் குஷ்பு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சந்தர்ப்பவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 2021-ம் ஆண்டு பலத்த அடி விழும்.. தமிழகத்தில் 2021 தேர்தல் கூட்டணியில் முக்கிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.. காங்கிரஸ் கட்சி சுமையாக கருதப்பட்டு தனித்து விடப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்..
I sense there will be a major shift in so called alliance of convenience in #TNelection2021 Won’t be surprised if @INCIndia will be left alone and not taken into consideration at all citing them to be a baggage of burden. #LetsWaitnWatch
— KhushbuSundar (@khushsundar) November 10, 2020