சுஜித் வில்சன் இந்த பெயரை கேட்டதும் தமிழகமக்களின் மனம் ஒரு வினாடி நின்று துடிக்கும் ஆனால் தாமிழகத்தில் சசிபெருமாள், அனிதா என எல்லா மரணத்தை வைத்தும் அரசியல் லாபம் பார்க்க துடிக்கும் கூட்டம் இப்பொழுது சுஜித் விஷயத்திலும் அரசையும் நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சியையும் கேள்வி கேட்டனர், இவர்களின் முகத்தில் ஓங்கி அறைந்தாற்போல ஒரு பழைய விஷயம் ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த 2014 – 15 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 36 குழந்தைகள் விழுந்ததாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் மீட்கப்பட்ட குழந்தைகளும் பலர் உண்டு. கடந்த 2012 இல் கிருஷ்ணகிரி தளி பகுதியில் 800 அடி ஆழ துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 40 அடி ஆழத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் 2 ஜே.சி.பி மூலம் மட்டுமே மீட்கப்பட்டது. அந்த மண்ணின் தன்மை மீட்பு பணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால், சுஜித் விஷயத்தில் துரதிஷ்டவசமாக எந்த சூழலும் சாதகமானதாக இல்லை. தமிழக அரசு தன்னால் என்னென்ன வழிகளில் முயற்சிக்க முடியுமோ அத்தனை முயற்சிகளையும் எடுத்தது அனல் பலனளிக்கவில்லை என்பதே உண்மை.