கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் நடைபெற்று ஓராமாண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர் சிவசந்திரன் தியாகத்தை போற்றும் விதமாக அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தில் அவரின் குடும்பத்தினரின் சொந்த செலவில் அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டது.
அம்மணிமண்டபத்தை அரசு தலைமை கொறடா திறந்து வைத்தார், மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி உரையாற்றினார்,மேலும் இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு அவரின் தியாகத்தை போற்றினர். இறுதியில் சிவசந்திரன் வாழ்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது.