அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் அன்வர் ராஜா. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அன்வர் ராஜா இழந்தார். மேலும் வக்பு வாரிய தலைவராக இருந்த அன்வர் ராஜா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் மோசடிக்கு உள்ளான அன்வர் ராஜா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அன்வர் ராஜாவின் வக்பு வாரிய தலைவர் பதவியும் பறிபோனது.
இதற்கிடையே அன்வர் ராஜா, 3-வதாக சமீரா சுல்தானன்என்ற 35-வயது பெண்ணை திருமணம் செய்து புரட்சி செய்தார்.
இவரது மகன் நாசர் அலி, முதலில் ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளரான சென்னையை சேர்ந்த பிரபல்லா என்பவரை காதலிப்பதாக நாடகமாடி, திருமணம் செய்வதாக ஆசை காட்டி, அவரை முஸ்லிம் பெண்ணாக மதம் மாற வர்புறுத்தினார்..
நாசரி அலியின் வார்த்தைகளை நம்பிய பிரபல்லாவும், முஸ்லிமாக மதம் மாறி, தனது பெயரை ரொபினா என்று மாற்றினார். 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுவரை கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல்லாவை கை கழுவிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் இந்த பிரச்சினை பரபரப்பாக பேசப்பட்டது. தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாயும், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும் பறித்துக்கொண்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரபல்லா புகார் அளித்தார்.
தனது எம்.பி பதவியையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி ஜமாத்தார்களையே மிரட்டி மகன் நாசர் அலியால் மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பிரபல்லாவுக்கு நீதி கிடைக்காமல் செய்தார் அன்வர் ராஜா.
இப்படி ஏராளமான பின்னணிகளைக் கொண்ட அன்வர் ராஜா, கடந்த செப்டம்பர் மாதம் தி.மு.கவில் இணைவதற்கு திட்டமிட்டார். அப்போது அறிவாலயத்துடன் பேரம் படியாததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இப்போது மு.க.ஸ்டாலினுடன் பேரம் படிந்துவிட்டதால், அவர் திமுகவில் ஐக்கியமாக தயாராகிவிட்டார். இதனை வெளிப்படுத்தும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை எச்சரித்து பேட்டியளித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அன்வர் ராஜா கூறியதாவது:-
ராஜ்யசபாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது அதிமுக எம்பிக்கள் ஆதரித்து வாக்களித்ததால் இந்த மசோதா 125 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு எதிராக 105 வாக்குகள் விழுந்தன.
முத்தலாக் சட்ட முன்வடிவு பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது நான் அதனை எதிர்த்து குரல் கொடுத்தேன். தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவாக செயல்படுகிறது.
இதனால், குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுப்பப்பியுள்னேன்.
இவ்வாறு அன்வர் ராஜா கூறினார்.
எனவே விரைவில் “முஸ்லிம் மக்களின் நலன் கருதி” திமுகவில் அன்வர் ராஜா இணைவதை எதிர்ப்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Source கதிர்