சென்னை மேடவாக்கத்தில், இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியின் முன்னாள் முதல்வர் மீதும் அலுவலக கண்காணிப்பாளர் மீதும் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் 2013 செப்டம்பரில் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் பாலியல் தொந்தரவு மற்றும் ஜாதி பாகுபாடு காட்டுவதாகவும் அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அந்த காவல்துறை அதிகாரி அந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்காமல் கல்லூரி முதல்வருக்கு ஜால்ரா அடித்துள்ளார். இதனால் பெரிதும் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் ஊழியர் கடைசியாக தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உதவி ஆணையர் அல்லது டி.எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து, மேல் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் பரிந்துரைகளை போலீஸ் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு – இஸ்லாமிய கல்லூரி முதல்வரின் மன்மதலீலை !
Share it if you like it
Share it if you like it