கொரோனா தொற்றை பரப்பியது சீனா. என்று உலக நாடுகள் இன்று வரை அந்நாட்டின் மீது கடுமையான, குற்றச்சாட்டுக்களை கூறி வருவது, ஒருபுறம் இருந்தாலும். நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் பொருட்டு இரவு, பகலாக தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் அரும்பாடுப்பட்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
கொரோனா அச்சம் காரணமாக, உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தூக்க உறவினர்களோ, மற்றவர்களோ, வராத நிலையில் எதற்கும் அஞ்சாமல் தானே முன் வந்து. தனது கைகளால் அவ்வுடலை, பெண் காவல் ஆய்வாளர் அல்லிராணி, தூக்கிய சம்பவத்தை அடுத்து தமிழகம், முழுவதும் அவருக்கு பாராட்டுக்கள், குவிந்த வண்ணம் உள்ளது.
திருவண்ணாமலையில், அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. அல்லிராணியின் சேவைக்கு பாராட்டு பத்திரம் தந்தது மட்டுமில்லாமல், மேடையில் இருந்து கீழே இறங்கி அவருக்கு சல்யூட் செய்து இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu: Tiruvannamalai district collector Thiru Kandasamy not just recognising but saluting a lady police officer, Ms. Allirani for her prompt action to come to the rescue of a carrying the body of a person who died of COVID. Power of example. pic.twitter.com/8WQNhOD7QX
— Sudarshan Ramabadran (@sudarshanr108) August 17, 2020