பேட்டரியை தக்கவைப்பது எப்படி

பேட்டரியை தக்கவைப்பது எப்படி

Share it if you like it

எந்த நேரத்தில் பேட்டரி தன்னுடைய செயலை இழக்கும் என்று துல்லியமாக சொல்ல முடியாது. சில நேரங்களில் பேட்டரி திணறக்கூட செய்யும். தற்போது ஸ்மார்ட் போனின் பேட்டரி திறனைப் பாதுகாக்கவும், சார்ஜை ரொம்ப நேரம் தக்க வைக்கவும் சில ஆலோசனைகளைத் தந்துள்ளனர், நிபுணர்கள்.

முதலில் உங்கள் போனின் சாப்ட்வேர்களை அப்டேட்டாக வைத்துக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன்களில் அந்தந்த கம்பெனிகள் அடிக்கடி சாப்ட்வேரை அப்டேட் பண்ணச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கும். இது பல நேரங்களில் எரிச்சலூட்டும். இருந்தாலும் அப்டேட் செய்து கொள்வது நல்லது.

பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க இந்த சாப்ட்வேர் அப்டேட் பெரும் உதவி செய்கிறது. அடுத்து ஆப்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு சதவீதம் சார்ஜை எடுத்துக்கொள்கிறது என்ற கிராப் உங்களின் ஸ்மார்ட்போனிலேயே இருக்கும். அதிக சார்ஜை உறிஞ்சும் ஆப்களை தேவையான போது மட்டும் பயன்படுத்திவிட்டு அணைத்து வைத்துவிடுவது நல்லது.

ஸ்கிரீன் வெளிச்சம் சார்ஜை அதிகமாக தின்னும். தொடர்ந்து ஸ்கிரீனின் வெளிச்சம் அதிகமாக இருப்பது தொடர்ந்தால் பேட்டரியின் வாழ்நாள் குறையும். அதனால் ஸ்கிரீனை மங்கலாக வைத்துக்கொள்வது சார்ஜை ரொம்ப நேரம் தாக்குப்பிடித்துக்கொள்வதோடு, பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கவும் உதவுகிறது.

மொபைல் நிறுவனங்கள் தரும் இணைய வசதியைப் பயன்படுத்துவதை விட, வைபை இணைய வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது. அப்போது ஏரோபிளேன் மோடில் கூட போனை வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனிலும் பேட்டரி சேவர் அல்லது லோ பேட்டரி மோட் இருக்கும். இதை சார்ஜ் குறையும்போது போனின் ஸ்கிரீனில் தெரியவரும். பெரும்பாலானவர்கள் இதை மூடி விடுவார்கள். இது தவறானது. பேட்டரி சேவரைப் பயன்படுத்துவது அதன் வாழ்நாளை நீட்டிக்கிறது.


Share it if you like it