போலி செய்திகள் மூலம் மதக்கலவரத்தை தூண்டும் பத்திரிக்கையாளர் மற்றும் கம்யூனிஸ்ட்கள்!

போலி செய்திகள் மூலம் மதக்கலவரத்தை தூண்டும் பத்திரிக்கையாளர் மற்றும் கம்யூனிஸ்ட்கள்!

Share it if you like it

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. ஆனால் கம்யூனிஸ்ட்கள், போலி அரசியல்வாதிகள், ஊடக நெறியாளர்கள், என்று தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி மக்களை மத்திய, அரசின் மீது கோபத்தை, ஏற்படுத்த முயற்சி செய்து வருவதை மக்கள் பார்த்து கொண்டு வருகின்றனர்.

அண்மையில்  அருணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

“அகமதாபாத் மருத்துவமனையில் இந்துக்களுக்கு, முஸ்லிம்களுக்கு என தனித்தனி கொரோனா வார்டுகள்”: செய்தி. குஜராத் “ஒரு மாதிரியான” மாநிலம் என்று ஏன் சங்கிகள் சொன்னாங்கன்னு தெரிஞ்சதா?

அதேபோன்று சபீர் அகமது என்னும் ஊடக நெறியாளர் உண்மை தன்மை என்னவென்றே அறியாமல் பத்திரிக்கை செய்தியை மேற்கோள் காட்டி கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார்.

ஆன்டினேஷனல் என்று அழைக்கப்படும் இந்த வைரஸூக்க எந்த சிகிச்சையும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு குஜராத் சுகாதாரத்துறை மத அடிப்படையில் யாரையும் பிரித்து வைக்கவில்லை என்று விரிவான விளக்கம் அளித்துள்ளது.

 கம்யூனிஸ்ட்கள், போலி ஊடகவியலாளர்கள்  கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிடும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it