Share it if you like it
- அசாம் எம்.எல்.ஏ அமினுல் இஸ்லாம் என்பவர், சீன கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வகுப்புவாத முயற்சியாகக் குற்றம் சாட்டினார். மேலும் நிஜாமுதீன் மார்க்கஸைச் சேர்ந்த எவரும் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதிக்கவில்லை என்றும் ஒரே ஒருவர் மட்டும்தான் இறந்தார் அவரும் வேறு ஒரு நோயால் இருந்தாரே தவிர கொரோனா நோயால் இறக்கவில்லை என்று கூறினார். மேலும் கொரோனா வைரஸிற்கான தனிமைப்படுத்தும் வார்டுகள், தடுப்புக்காவல் நிலையங்கள் போன்றவை இது ஒரு குறிப்பிட்ட பகுதியினரைக் கொல்ல அரசாங்கத்தின் சதி என்று அமினுல் இஸ்லாம் தொடர்ந்து மக்களிடையே போலி செய்தியை கூறி வந்தார்.
- அவர் தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களையும் விமர்சித்ததோடு, முஸ்லிம் சமூகத்தின் பிம்பத்தை கேவலப்படுத்த அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு தொடர்ந்து போலியான செய்திகளையும் வதந்திகளையும் பரப்பியதற்காகவும், அரசை தவறாக விமர்சித்ததற்காகவும் அவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்றியவர்கள் எல்லாம் பெரும்பாலும் நிஜாமுதீன் மார்க்கஸை சேர்ந்தவர்களாக தான் உள்ளார்கள் என்று மருத்துவ அறிக்கை கூறப்படுகிறது.
Share it if you like it