கடலூரில் போலி ரேஷன் கார்டுகளை தயாரித்து கொடுத்துவந்த முகமது சம்ஜிதை அதிகாரிகள் கையும்களவுமாக பிடித்த பின்னரும், இஸ்லாமிய ஜமாத்தினர் மிரட்டலுக்கு பயந்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்ப சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தாசில்தார் அலுவலகம் முன்பு தனியார் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் 300 ரூபாய் கொடுத்தால் போலி ரேஷன் கார்டுகள் தயார் செய்து கொடுத்துவந்துள்ளனர். இதனையடுத்து தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில், தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது வாடிக்கையாளர்களிடம் விபரங்களை பெற்றுகொண்டு போலியாக ஸ்மார்ட் கார்டுகள் தயாரித்து கொடுப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கிருந்து ஏராளமான போலி ரேஷன் அட்டைகளை கைப்பற்றிய பின் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். கம்ப்யூட்டர் சென்டரின் சுவற்றில் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் தயார்செய்து தரப்படும் என்பதை நோட்டீஸாகவே ஒட்டிவைத்திருந்தனர்.
இந்நிலையில், காவல் துறையினர் வந்து கடையின் உரிமையாளர் முகமது சம்ஜிதை விசாரித்ததில் அங்கு நடந்த சட்ட விரோத ரேஷன் கார்டு தயாரிப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர் முகமது சம்ஜித் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வருவதாகவும், இவருக்கு காட்டுமன்னார்கோவிலில் மேலும் 2 கடைகள் இதேபோன்று செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.
இதற்கிடையே கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளருக்கு ஆதரவாக இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்த சிலர் அதிகாரி சாருலதாவை பெண் என்றும் பாராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிரண்டு போன சாருலதா, சிக்கியவர் மீது புகார் அளிக்காமல் சென்றுவிட்டார்.
நாடு முழுவதும் அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுப்பதும், அவற்றை எதிர்த்து சம்பந்தமே இல்லாமல் உள்நாட்டு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பினர் போராடி வருவதும். மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள சூழலில். கடலூரில் போலி ரேஷன் கார்டு தயாரிப்பு படுஜோராக நடந்துவருவதும் அதற்கு ஆதரவாக இஸ்லாமிய ஜமாத்தினர் அரசு அதிகரிகளையே மிரட்டுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது