மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை, ஆனால் மக்களை வழிநடத்தும் ஆட்சி அதிகாரம் மட்டும் வேண்டுமா ? – நெட்டிசன்கள் பளார் !

மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை, ஆனால் மக்களை வழிநடத்தும் ஆட்சி அதிகாரம் மட்டும் வேண்டுமா ? – நெட்டிசன்கள் பளார் !

Share it if you like it

  • நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றினால் அரசானது மக்களை காப்பாற்றும் எண்ணத்தில் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த ஊரடங்கினால் ஏழை எளிய மக்கள் மற்றும் அன்றாடம் வேலை செய்து வருமானம் ஈட்டி குடும்பத்தை நடத்தி கொண்டிருப்பவர்கள், அடித்தட்டு மக்கள் இவர்களுக்கு எல்லாம் ஆர்எஸ்எஸ் , இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் என பல ஹிந்து அமைப்புகள் மற்றும் பிஜேபி கட்சி ஆகியவை தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்திய நாளிலிருந்து உணவு பொட்டலங்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கி வருகிறது. இதனை நாமும் தினமும் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில், சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம்.
  • ஆனால் மேடைகளில் மட்டும் நான் முதல்வரானால் மக்களுக்கு அது செய்வேன் இது செய்வேன் என்று தம்மட்டம் அடித்த எந்த கட்சியினராவது யாருக்காவது உதவி செய்தார்கள் என்று எந்த ஊடகங்களில், எந்த பத்திரிகைகளில் பார்த்ததுண்டா ?
  • திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பார் சீமான், திக தலைவர் வீரமணி , கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்னன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக தலைவர் வைகோ மற்றும் சமூக போராளியான இயக்குனர் கௌதமன், திருமுருகன் காந்தி இன்னும் எத்தனையோ போராளிகள் உள்ளனர். ஊரடங்கு ஆரமித்த நாள் முதல் இதுநாள் வரை இவர்களில் யாராவது ஏழை மக்களுக்கு உணவு அல்லது எதாவது உதவி செய்த செய்திகளை பார்க்க மாட்டேனா என்று ஏங்கி கொண்டிருக்க அதுபோல் ஒரு சம்பவம் இதுவரை நடக்கவில்லை. இவர் எல்லாம் சமூக போராளிகள் இல்லை சமூக வலைத்தள போராளிகள் என்று இப்பொழுதுதான் புரிகிறது.
  • ஆபத்து காலங்களில் தான் உண்மையான, நேர்மையான மனிதர்களை அறிந்துகொள்ள முடியும் என்று தமிழில் ஒரு பொன்மொழி உள்ளது. அந்த பொன்மொழி தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளியில் பார்த்திடாத அத்தனை பேரும் சமீபத்தில் மத்திய அரசு பற்றி ஒரு தவறான செய்தி பரவி கொண்டிருந்த நிலையில் மத்திய அரசை குறை கூற வரிந்து கொண்டு முதல் ஆளாய் தனது எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர்.
  • மக்களுக்கு உதவி என்றால் அத்தனை பேரும் எங்கேயோ மறைந்துகொள்கின்றனர். மோடி அரசி விமர்ச்சிக்க மட்டும் முதல் ஆளாய் வந்து நிற்கின்றனர். இதிலிருந்து இவர்களுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை, மோடி அரசை விமர்ச்சிக்க வேண்டும், தாம் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற சுயநல எண்ணம் கொண்டிருப்பதை இந்த சம்பவம் மிக தெளிவாக எடுத்துரைக்கிறது. இவ்வாறு நெட்டிசன்கள் சிலர் தங்கள் மனதில் உள்ள ஆதகங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆறுதல் அடைந்து கொள்கின்றனர்.

Share it if you like it