EIA வரைவு மசோதா அறிக்கையை முழுமையாக படிக்காமல். வழக்கம் போல திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சில்லறை போராளிகள், மற்றும் சில திரைப்பட நடிகர்கள் மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்பி வருவதன் மூலம் அவர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய அரசின் சட்டத்தில் உள்ள சாதகம் மற்றும் பாதகம் என்ன வென்பதை முழுமையாக படித்து ஆராய்ந்து. அதன் பின்னே தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் இவர்களின் முழு நோக்கமும் மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும், விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருப்பது. இவர்களின் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களிடம் தவறான கருத்தினை கூறி அவர்களை தூண்டும் விதமாக பேசிய காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுற்றுசூழல் பாதிப்பை தடுக்க சட்டங்கள் இருக்கும்போதே அவை பின்பற்றபடாத சூழல் இருக்கிறது. இந்நிலையில் சட்டங்களை தளர்த்தி மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பது, வளங்கள் சுரண்டபடுவதற்கே வழிவகுக்கும். எனவே, EIA 2020 விதிமுறைகளை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். #WithdrawEIA2020 #ScrapEIA2020 pic.twitter.com/bnPR2mHDj7
— Jothimani (@jothims) July 27, 2020