இயற்கை நமக்கு அளித்த மருத்துவ மூலிகைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் மணத்தக்காளி கீரையின் பழம், வேர் போன்றவை நமது உடல் நலப்பிரச்சனைகள் பலவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
மணத்தக்காளிக் கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.
மணத்தக்காளிக் கீரையின் சாறு காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் கை, கால் வலிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சியாகும்.
மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் தினந்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால், சிறுநீரைப் பெருக்கும். மேலும் உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கத்தைக் குணப்படுத்தும்.
தோலில் ஏற்படும் அலர்ஜி, வெயிலினால் ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றின் மேல் மணத்தக்காளிக் கீரையின் சாற்றை பிழிந்து தடவினால் விரைவில் குணமாகும்.
வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
மணத்தக்காளிக் கீரை கருப்பையில் கருவலிமை பெறுவதற்கு உதவுகிறது.
மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றில் குடிநீர் தயார் செய்து அருந்தினால் நோயற்ற வாழ்வைப் பெறலாம்.
மணத்தக்காளிக் கீரையை உண்பதால் உடல் களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மேலும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் கண்பார்வை தௌpவு பெறும்.
மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒரு முறை உண்டுவந்தால், கடுமையான உழைப்பின் காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.
மணத்தக்காளிக் கீரை மற்றும் பழத்தினை காய வைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனை காலை மற்றும் மாலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் வலிமையடையும்.
மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இக்கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.