Share it if you like it
அபுதாபி நீதித்துறையின் சமூக பொறுப்புணர்வு நிபுணர் அமீனா அல் மஸ்ரூய்,மக்கள் தங்கள் சாதி, மதம் மற்றும் நிற அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதை நாங்கள் எதிர்த்து நிற்கிறோம். அவ்வாறு செய்பவர் குற்றவாளி ஆவார். அவர் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார் மற்றும் நாட்டின் விதிகளின்படி 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சட்டம் :- எந்தவொரு மதத்தையும் அல்லது அதன் புனிதமான விஷயங்களையும் புண்படுத்துவது, வன்முறையால் மத அனுசரிப்புகள் அல்லது விழாக்களை சீர்குலைத்தல் அல்லது தடுப்பது, எந்த வகையிலும் சிதைப்பது, எந்த புனித நூல்களும், வழிபாட்டுத் தலங்கள், கல்லறைகள், சின்னங்கள் ஆகியவற்றை அழித்தல் அல்லது தீங்கு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
Share it if you like it