கேரளாவையும் மிஞ்சும் வகையில் தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் நெல்லை, கன்யாகுமரி, தூத்துக்குடி பகுதிகள் மற்றும் இன்ன பிற இடங்களில் நாளுக்கு நாள் அப்பாவி தமிழர்கள் ஆசை வார்த்தை கூறியும், பரிசுபொருட்கள், உணவு பொருட்கள் என மதமாற்றம் செய்து வருவது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவமாகவும் சமூக ஒற்றுமையை பாதிக்கும் செயலாகவும் இது திகழ்கிறது.
எங்கு ஹிந்துக்கள் சிறுப்பான்மையினர் ஆகின்றனரோ, அன்றே அவர்களின் வழிபாட்டு தலங்கள் முதல் கொண்டு அனைத்து உரிமைகளும் இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் ஹிந்து அமைப்புகளும் இன்னும் பிற அமைப்பினரும் மதமாற்றத்திற்கு எதிராக போராடுவதும், சிலரை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுப்பதையும் அன்றாடம் நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இதன் அடிப்படையில்
ஜெய்சுகின் என்னும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். அதில் மதமாற்றம் செய்வதால் சமூகத்தில் என்ன மாதியான அசம்பாவிதங்கள் நிகழும் என்றும், ஏற்கனவே ராமலிங்கம் போன்ற அப்பாவி நபர்களின் உயிர் பறிக்கப்பட்டு இருப்பதும், மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் இதுகுறித்து நாங்கள் எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இது மாநில அரசின் சட்ட விதிகளின் படி அம்மாநில அரசுகளுக்கே முழுமையான சுதந்திரம் உள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தவிட்டனர்.