மதம் என பிரிந்தது போதும் – குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அப்பாவி ஹிந்துக்களை தூண்டியவர்கள் உனது பண்டிகைக்கு குரல் கொடுத்தார்களா?

மதம் என பிரிந்தது போதும் – குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அப்பாவி ஹிந்துக்களை தூண்டியவர்கள் உனது பண்டிகைக்கு குரல் கொடுத்தார்களா?

Share it if you like it

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி, தொடர்ந்து தவறான பிரச்சாரத்தை தி.மு.க, தி.க, வி.சி.க, இஸ்லாமிய அமைப்புகள், கிறிஸ்தவ மிஷநரிகள், உட்பட பலர் தொடர்ந்து மேற்கொண்டு மத்திய அரசின் மீது மக்களுக்கு கோவம் ஏற்படும் வகையில் அவர்களை தூண்டி அரசியல் ஆதாயம் தேடினர்.

போலி அரசியல்வாதிகளின் பொய்யான பேச்சை நம்பி அப்பாவி ஹிந்துக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள், என்பது பொய் இது உண்மைக்கு புறம்பான செயல். இந்த சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு, எவ்விதத்திலும் பாதிப்பு இல்லை என்பதை தமிழக மக்கள் தற்பொழுது உணர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜாதி, மதம், பாராமல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அப்பாவி ஹிந்துக்களே விநாயகர் சதுர்த்திக்கு வன்மத்தோடு தடை விதிக்க முயலும் விடியல் அரசிற்கு எதிராக திருமாவளவன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்றா. சற்குணம்,  ஜவாஹிருல்லா, சில்லறை ஊடகங்கள், சீமான், கனிமொழி, சுந்தரவள்ளி, அருணன், இன்னும் ஏராளமான போராளிகளின் உண்மையான சுயரூபத்தை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it