ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் சிறிது காலம் மதுபானம் பற்றிய சிந்தனை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் மதுக்கடைகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டு இருப்பது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும் ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ சர்வ்பள்ளி ராதா கிருஷ்ணன் இந்த செய்தியை படித்திருந்தால் ஆந்திர அரசு கற்பிப்பதற்குப் பதிலாக ‘ஆசிரியர்களை மதுபானக் கடைகளை பாதுகாக்க கட்டாயப்படுத்துகிறது என்று உணர்ந்திருப்பார். இது ஆசிரியர்களின் மன உறுதியை மேலும் குலைக்கும் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
Don’t bring down the morale of ‘TEACHERS’. I wonder! what if, Late Sri Sarvepalli Radhakrishnan
( Great Guru & Former President of India) would have felt ,after reading this news, that AP Govt is forcing ‘teachers to guard liquor shops’ instead of teaching. pic.twitter.com/3hg5Tmoh0T— Pawan Kalyan (@PawanKalyan) May 5, 2020