இந்தியாவில் சாதனை புரிந்த பெண்கள், குழந்தைகள், யாரும் இல்லையா? என்று நெட்டிசன்கள் கேரள அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எளிமையானவர்கள், தூய்மையானவர்கள், என்று கூறி கொண்டு ஆட்சிக்கு வருவது. வந்த பின்பு, சீன கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை, மக்களின் மீது திணிப்பது. எதிர்ப்பவர்களின் மீது தனது, கோர முகத்தை காட்டுவது, என முன்னர் மேற்கு வங்கமும் இன்று கேரளாவும், இருப்பதாக மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
பெண் குழந்தைகளின், எதிர்காலம் சிறப்பாக இருக்கவும். அவர்கள் வாழ்வில் மேம்படவும், ”பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ” என்னும் திட்டத்தை (பெண்குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்) என்னும் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
ஆனால் கேரள கம்யூனிஸ்ட் அரசோ இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தும் புகைப்படத்தில், இந்திய குழந்தைக்கு பதில் பாகிஸ்தான், நாட்டு பெண் மலாலாவின் புகைப்படத்தை, வெளியிட்டு இருப்பது. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.