பாரதப் பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவிற்கு உலக நாடுகள் முதல் ஐ.நா சபை வரை பாராட்டுகளை தெரிவித்துள்ளன. ஊரடங்கு உத்தரவினால் மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் CPIM கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் எம்.பி இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
EMI கட்ட மூன்று மாத விலக்கு.
மத்திய அரசுக்கு நன்றி.
இன்று ஊடகங்களை சந்தித்த
ரிசர்வ் வங்கி கவர்னர் இ.எம்.ஐ கட்ட மூன்று மாத விலக்களித்துள்ளார் .மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் எனது நன்றி.
சு. வெங்கடேசன்MP
மதுரை@RBI #EMIs #Exemption #three_months pic.twitter.com/KaMkv5X6ry— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 27, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்களின் பெரும் அச்சமாக இருந்த வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் கடன்களின் மாதாந்திர தவணை மூன்று மாதத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மத்திய நிதித்துறை அமைச்சருக்கு கடந்த 24 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்தனர். இன்று ஊடகங்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் இ.எம்.ஐ கட்ட மூன்று மாத விலக்களித்துள்ளார்.
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் எனது நன்றி என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.