மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும்-பிரதமர் மோடி!

மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும்-பிரதமர் மோடி!

Share it if you like it

வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் நிறைவேற்றும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று கூறியுள்ள மோடி, மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் “MyGov” என்ற அரசின் இணையதளத்தில் வழங்க முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Share it if you like it